தெவ்வினையார் அரக்கர்குலம் செற்ற வெற்றிச் சிங்கமே எங்கள்குல தெய்வ மேயோ வௌ;வினைதீர்த் தருள்கின்ற ராம நாம வியன்சுடரே இவ்வுலக விடயக் காட்டில் இவ்வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க் கிலக்கானேன் துணைஒன்றும் இல்லேன் அந்தோ செய்வினைஒன் றறியேன்இங் கென்னை எந்தாய் திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வ தென்னே