தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன் சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன் யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன் உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன் ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே