தேகாதி மூன்றும்உன் பாற்கொடுத் தேன்நின் திருவடிக்கே மோகா திபன்என் றுலகவர் தூற்ற முயலுகின்றேன் நாகா திபரும் வியந்திட என்எதிர் நண்ணிஎன்றும் சாகா வரந்தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே