தேசுவிரித் திருளகற்றி என்றும் ஓங்கித் திகழ்கின்ற செழுங்கதிரே செறிந்த வாழ்க்கை மாசுவிரித் திடுமனத்தில் பயிலாத் தெய்வ மணிவிளக்கே ஆனந்த வாழ்வே எங்கும் காசுவிரித் திடுமொளிபோல் கலந்து நின்ற காரணமே சாந்தமெனக் கருதா நின்ற தூசுவிரித் துடுக்கின்றோர் தம்மை நீங்காச் சுகமயமே அருட்கருணை துலங்கும் தேவே