தேடார்க் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரத் தோடார் பணைத்தோட் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி வாடாக் காதல் கொண்டறியேன் வளையும் துகிலும் சோர்ந்ததுடன் ஏடார் கோதை என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே