தேடிய துண்டு நினதுரு வுண்மை தெளிந்திடச் சிறிதுநின் னுடனே ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே உரைத்ததும் உவந்ததும் உண்டோ ஆடிய பாதம் அறியநான் அறியேன் அம்பலத் தரும்பெருஞ் சோதி கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக் கூறவுங் கூசும்என் நாவே