தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய் ஆடுகின்ற சேவடிக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன் வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கால் மாற்றுதியே