தேடுவார் தேடும் செல்வமே சிவமே திருஅரு ணாபுரித் தேவே ஏடுவார் இதழிக் கண்ணிஎங் கோவே எந்தையே எம்பெரு மானே பாடுவார்க் களிக்கும் பரம்பரப் பொருளே பாவியேன் பொய்யெலாம் பொறுத்து நாடுவார் புகழும் நின்திருக் கோயில் நண்ணுமா எனக்கிவண் அருளே