தேடேனோ என்நாதன் எங்குற்றான் எனஓடித் தேடிச் சென்றே நாடேனோ தணிகைதனில் நாயகனே நின்அழகை நாடி நாடிக் கூடேனோ அடியருடன் கோவேஎம் குகனேஎம் குருவே என்று பாடேனோ ஆனந்தப் பரவசம்உற் றுன்கமலப் பதம்நண் ணேனோ திருச்சிற்றம்பலம் நெஞ்சொடு புலத்தல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்