தேட்டக்கண் டேர்மொழிப் பாகா உலகில் சிலர்குரங்கை ஆட்டக்கண் டேன்அன்றி அக்குரங் கால்அவர் ஆடச்சற்றும் கேட்டுக்கண் டேனிலை நானேழை நெஞ்சக் கிழக்குரங்கால் வேட்டுக்கொண் டாடுகின் றேன்இது சான்ற வியப்புடைத்தே