தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்றுளம் பயந்தே நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்துற்ற இளைப்பை ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தைநீ அறிந்தது தானே சிறுகுறும் - முதற்பதிப்பு, பொ சு, சமு க பதிப்பு