தேனமர் பசுங்கொன்றை மாலையா டக்கவின் செய்யுமதி வேணியாட செய்யுமுப் புரிநூலு மாடநடு வரியுரி சிறந்தாட வேகரத்தில் மானிமிர்ந் தாடஒளிர் மழுவெழுந் தாடமக வானாதி தேவராட மாமுனிவர் உரகர்கின் னரர்விஞ்சை யருமாட மால்பிரம னாடஉண்மை ஞானஅறி வாளர்தின மாடஉல கன்னையாம் நங்கைசிவ காமியாட நாகமுடன் ஊகமன நாடிஒரு புறமாட நந்திமறை யோர்களாட ஆனைமுக னாடமயி லேறிவிளை யாடுமுயர் ஆறுமுக னாடமகிழ்வாய் அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே