தேன்என இனிக்கும் திருவருட் கடலே தெள்ளிய அமுதமே சிவமே வான்என நிற்கும் தெய்வமே முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே ஊன்என நின்ற உணர்விலேன் எனினும் உன்திருக் கோயில்வந் தடைந்தால் ஏன்எனக் கேளா திருந்தனை ஐயா ஈதுநின் திருவருட் கியல்போ