தேன்நெய் ஆடிய செஞ்சடைக் கனியைத் தேனை மெய்அருள் திருவினை அடியர் ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை உள்ளத் தோங்கிய உவப்பினை மூவர் கோனை ஆனந்தக் கொழுங்கடல் அமுதைக் கோம ளத்தினைக் குன்றவில் லியைஎம் மானை அம்பல வாணனை நினையாய் வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே