தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத்() தினந்தோறும் நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும் தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே திருஞானசம்பந்தர் தேவாரத்தைத் திருக்கடைக்காப்பு என்பதும், திருநாவுக்கரசர் தேவாரத்தைத் தேவாரம் என்பதும், சுந்தரமூர்த்திகள் தேவாரத்தைத் திருப்பாட்டு என்பதும் ஒருவகை வழக்கு