தேன்மொழிப்பெண் ணரசிஅருட் செல்வம்எனக் களித்தாள் சிவகாம வல்லியொடு செம்பொன்மணிப் பொதுவில் வான்மொழிய நின்றிலங்கு நின்வடிவைச் சிறியேன் மனங்கொண்ட காலத்தே வாய்த்தஅனு பவத்தை நான்மொழிய முடியாதேல் அன்பர்கண்ட காலம் நண்ணியமெய் வண்ணமதை எண்ணிஎவர் புகல்வார் நூன்மொழிக்கும் பொருட்கும்மிக நுண்ணியதாய் ஞான நோக்குடையார் நோக்கினிலே நோக்கியமெய்ப் பொருளே