தேன்வழி மலர்ப்பூங் குழல்துடி இடைவேல் திறல்விழி மாதரார் பூணர்ப்பாம் கான்வழி நடக்கும் மனத்தினை மீட்டுன் கழல்வழி நடத்தும்நாள் உளதோ மான்வழி வரும்என் அம்மையை வேண்டி வண்பூனத் தடைந்திட்ட மணியே வான்வழி அடைக்கும் சிகரிசூழ் தணிகை மாமலை அமர்ந்தருள் மருந்தே