தேமாம் பொழில்சூ ழொற்றியுளீர் திகழுந் தகரக் காற்குலத்தைப் பூமா னிலத்தில் விழைந்துற்றீர் புதுமை யிஃதும் புகழென்றே னாமா குலத்தி லரைக்குலத்துள் ளணைந்தே புறமற் றரைக்குலங்கொண் டேமாந் தனைநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ