தேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப்பாலுண்ட செம்மணியைச் சீரோங்கு முத்துச் சிவிகையின் மேல்வைத்த தேவஉன்றன் பேரோங்கும் ஐந்தெழுத் தன்றோ படைப்பைப் பிரமனுக்கும் ஏரோங்கு காப்பைத் திருநெடு மாலுக்கும் ஈந்ததுவே