தேர்ந்து தேடினும் தேவர்போல் தலைமைத் தேவர் இல்லைஅத் தெளிவு கொண் டடியேன் ஆர்ந்து நும்அடிக் கடிமைசெய் திடப்பேர் ஆசை வைத்துமை அடுத்தனன் அடிகேள் ஓர்ந்திங் கென்றனைத் தொழும்புகொள் ளீரேல் உய்கி லேன்இஃ தும்பதம் காண்க சோர்ந்தி டார்புகழ் ஒற்றியூர் உடையீர் தூய மால்விடைத் துவசத்தி னீரே
தேர்ந்து தெளியாச் சிறியவனேன் தீமையெலாம் ஓர்ந்து நினைக்கிலெனக் கூடுருவிப் போகுதடா