தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளோ டூடிச் சிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெரியேன் போந்தகனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும் போதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே ஊர்ந்தபணக் கங்கணமே முதற்பணிகள் ஒளிர உயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான் சார்ந்தவரை எவ்வகையுந் தாங்கிஅளிக் கின்ற தயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே