தேவரெலாம் தொழுந்தலைமைத் தேவர் பாதத் திருமலரை முடிக்கணிந்து திகழ்ந்து நின்ற நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான நாயகனே நல்லவர்க்கு நண்ப னேஎம் பாவமெலாம் அகற்றிஅருட் பான்மை நல்கும் பண்புடைய பெருமானே பணிந்து நின்பால் மேவவிருப் புறும்அடியர்க் கன்பு செய்ய வேண்டினேன் அவ்வகைநீ விதித்தி டாயே