தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும் தொழிலிலே வந்தகோ பத்தில் சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த தருணம்நான் கலங்கிய கலக்கம் வகுப்புற நினது திருவுளம் அறியும் மற்றுஞ்சில் உயிர்களில் கோபம் மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம் மெய்யநீ அறிந்ததே அன்றோ