தொகையள விவைஎன் றறிவரும் பகுதித் தொல்லையின் எல்லையும் அவற்றின் வகையொடு விரியும் உளப்பட ஆங்கே மன்னிஎங் கணும்இரு பாற்குத் தகையுறு முதலா வணங்கடை யாகத் தயங்கமற் றதுவது கருவிச் சிகையுற உபயம் எனமன்றில் ஆடும் என்பரால் திருவடி நிலையே