தொடுக்க வோநல்ல சொன்மலர் இல்லைநான் துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லைஉள் ஒடுக்க வோமனம் என்வசம் இல்லைஊ டுற்ற ஆணவ மாதிம லங்களைத் தடுக்க வோதிடம் இல்லைஎன் மட்டிலே தயவு தான்நினக் கில்லை உயிரையும் விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன் விளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்