தொண்டர்க் கருளும் துணையே இணையில்விடம் உண்டச் சுதற்கருளும் ஒற்றியூர் உத்தமனே சண்டப் பவநோயால் தாயிலாப் பிள்ளையெனப் பண்டைத் துயர்கொளும்இப் பாவிமுகம் பாராயோ