தொண்டாளப் பணந்தேடுந் துறையாள உலகாளச் சூழ்ந்த காமப் பெண்டாளத் திரிகின்ற பேய்மனத்தீர் நும்முயிரைப் பிடிக்க நாளைச் சண்டாளக் கூற்றுவரில் என்புகல்வீர் ஞானசபைத் தலைவன் உம்மைக் கொண்டாளக் கருதுமினோ ஆண்டபின்னர் இவ்வுலகில் குலாவு வீரே