தொண்டு புரிவோர் தங்களுக்கோர் துணைவர் ஆவார் சூழ்ந்துவரி வண்டு புரியுங் கொன்றைமலர் மாலை அழகர் வல்விடத்தை உண்டு புரியுங் கருணையினார் ஒற்றி யூரர் ஒண்பதத்தைக் கண்டுங் காணேன் என்னடிநான் கனவோ நனவோ கண்டதுவே