தொழுகின்றோர் உளத்தமர்ந்த சுடரே முக்கண் சுடர்க்கொழுந்தே நின்பதத்தைத் துதியேன் வாதில் விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்பப் பேசி வெறித்துழலும் நாயனையேன் விழல னேனை உழுகின்ற நுகப்படைகொண் டுலையத் தள்ளி உழக்கினும்நெட் டுடல்நடுங்க உறுக்கி மேன்மேல் எழுகின்ற கடலிடைவீழ்த் திடினும் அன்றி என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்