தொழுது வணங்கும் சுந்தரர்க்குத் தூது நடந்த சுந்தரனார் அழுது வணங்கும் அவர்க்குமிக அருள்ஒற் றியினார் அணைந்திலரே பொழுது வணங்கும் இருண்மாலைப் பொழுது முடுகிப் புகுந்ததுகாண் செழுமை விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே