தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத் துதித்திலேன் தூய்மைஒன் றறியேன் கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில் கலந்துணக் கருதிய கருத்தேன் பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும் எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன் என்னினும் காத்தருள் எனையே