தோடுடை யார்புலித் தோலுடை யார்கடல் தூங்கும்ஒரு மாடுடை யார்மழு மான்உடை யார்பிர மன்தலையாம் ஓடுடை யார்ஒற்றி யூர்உடை யார்புகழ் ஓங்கியவெண் காடுடை யார்நெற்றிக் கண்உடை யார்எம் கடவுளரே