தோன்றியஐங் கருவினிலே சொல்லரும்ஓர் இயற்கைத் துலங்கும்அதில் பலகோடிக் குலங்கொள்குருத் துவிகள் ஆன்றுவிளங் கிடும்அவற்றின் அசலைபல கோடி அமைந்திடும்மற் றவைகளுளே அமலைகள் ஓர்அனந்தம் ஏன்றுநிறைந் திடும்அவற்றிற் கணிப்பதனுக் கரிதாய் இலங்குபிர காசிகள்தாம் இருந்தனமற் றிவற்றில் ஊன்றியதா ரகசத்தி ஓங்குமதின் நடுவே உற்றதிரு வடிப்பெருமை உரைப்பவரார் தோழி