தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம் சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல் ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும் உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய் ஆன்றதிரு அருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே ஏன்றதிரு அமுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே