தோற்றம்ஒன்றே வடிவொன்று வண்ணம்ஒன்று விளங்கும் சோதிஒன்று மற்றதனில் துலங்கும்இயல் ஒன்று ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக் கிறைஒன்றாம் இத்தனைக்கும் என்கணவர் அல்லால் ஆற்றமற்றோர் அதிகாரி இல்லையடி மன்றில் ஆடும்அவர் பெருந்தகைமை யார்உரைப்பார் தோழி