தோலைக் கருதித் தினந்தோறும் சுழன்று சுழன்று மயங்கும்அந்த வேலைக் கிசைந்த மனத்தைமுற்றும் அடக்கி ஞான மெய்ந்நெறியில் கோலைத் தொலைத்துக் கண்விளக்கம் கொடுத்து மேலும் வேகாத காலைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே