நங்கட் கிளியாய் சரணம் சரணம் நந்தா உயர்சம் பந்தா சரணம் திங்கட் சடையான் மகனே சரணம் சிவைதந் தருளும் புதல்வா சரணம் துங்கச் சுகம்நன் றருள்வோய் சரணம் சுரர்வாழ்த் திடுநம் துரையே சரணம் கங்கைக் கொருமா மதலாய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்