நச்சி லேபழ கியகருங் கண்ணால் நலத்தை வேட்டுநற் புலத்தினை இழந்தேன் பிச்சி லேமிக மயங்கிய மனத்தேன் பேதை யேன்கொடும் பேயனேன் பொய்யேன் சச்சி லேசிவன் அளித்திடும் மணியே தங்கமே உன்றன் தணிகையை விழையேன் எச்சி லேவிழைந் திடர்உறு கின்றேன் என்செய் வான்பிறந் தேன்எளி யேனே