நச்சுகின்றேன் நிச்சலிங்கே ஆடவா ரீர் நாணமச்சம் விட்டேனென்னோ டாடவா ரீர் விச்சையெலாம் தந்துகளித் தாடவா ரீர் வியந்துரைத்த தருணமிதே ஆடவா ரீர் எச்சுகமும் ஆகிநின்றீர் ஆடவா ரீர் எல்லாம்செய் வல்லவரே ஆடவா ரீர் இச்சைமய மாய்இருந்தேன் ஆடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்