நச்சை மிடற்றணிந்த நாயகனே ஓர்பாகம் பச்சைநிறம் கொண்ட பவளத் தனிமலையே மிச்சை தவிர்க்கும்ஒற்றி வித்தகனே நின்அருட்கே இச்சைகொடு வாடும்இந்த ஏழைமுகம் பாராயோ