நடங்கொண்ட பொன்னடி நீழலில் நான்வந்து நண்ணுமட்டும் திடங்கொண்ட நின்புகழ் அல்லால் பிறர்புகழ் செப்பவையேல் விடங்கொண்ட கண்டத் தருட்குன்ற மேஇம வெற்புடையாள் இடங்கொண்ட தெய்வத் தனிமுத லேஎம் இறையவனே