நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய் நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய் இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர் எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள் திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ