Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3155
நடுங்கமலக் கண்குறுகி நெடுங்கமலக் கண்விளங்கும்()

நல்லதிரு வடிவருந்த வல்இரவில் நடந்து
தொடுங்கதவந் திறப்பித்துத் துணிந்தெனையங் கழைத்துத்

துயரமெலாம் விடுகஇது தொடுகஎனக் கொடுத்தாய்
கொடுங்குணத்தேன் அளவினில்என் குற்றமெலாங் குணமாக்

கொண்டகுணக் குன்றேநின் குறிப்பினைஎன் புகல்வேன்
இடுங்கடுக என்றுணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர்

ஏத்தமணிப் பொதுவில்அருட் கூத்துடைய பொருளே   

 அடிகளாரின் எழுத்து பாவில் உள்ளபடி தோன்றுகிறது 
தொவே அவர்களும் அப்படியே பதித்திருக்கிறார்கள் 
சீர் அமைவு கருதி "நெடுங்கமலம் விளங்கும்" எனக் 
கொள்வார் கொள்க ஆபா

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.