நடைஏய் துயரால் மெலிந்து நினை நாடா துழலும் நான்நாயில் கடையேன் எனினும் காத்தல்என்றன் கண்ணே நினது கடன்அன்றோ தடையேன் வருவாய் வந்துன்அருள் தருவாய் இதுவே சமயம்காண் செடிதீர்த் தருளும் திருத்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே திருச்சிற்றம்பலம் நின் அருட்கார்வம் குறைஇரந்த பத்து எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்