நடைக்குரிய உலகிடைஓர் நல்லநண்பன் ஆகி நான்குறித்த பொருள்கள்எலாம் நாழிகைஒன் றதிலே கிடைக்கஎனக் களித்தகத்தும் புறத்தும்அகப் புறத்தும் கிளர்ந்தொளிகொண் டோ ங்கியமெய்க் கிளைஎனும்பேர் ஒளியே படைப்புமுதல் ஐந்தொழிலும் கொள்கஎனக் குறித்தே பயந்தீர்த்தென் உள்ளகத்தே அமர்ந்ததனிப் பதியே கடைப்படும்என் கரத்தில்ஒரு கங்கணமும் தரித்த ககனநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே