நட்டானை நட்டஎனை நயந்து கொண்டே நம்மகன்நீ அஞ்சல்என நவின்றென் சென்னி தொட்டானை எட்டிரண்டும் சொல்லி னானைத் துன்பமெலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க ஒட்டானை மெய்அறிவே உருவாய் என்னுள் உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள எட்டானை என்னளவில் எட்டி னானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே