நண்ணாத வஞ்சர் இடம்நாடி நெஞ்சம் நனிநொந்து நைந்து நவையாம் புண்ணாகி நின்ற எளியேனை அஞ்சல் புரியாது நம்பொன் அடியை எண்ணாத பாவி இவன்என்று தள்ளின் என்செய்வ துய்வ தறியேன் தண்ணார் பொழிற்கண் மதிவந் துலாவு தணிகா சலத்தி றைவனே