நண்ணிய மதநெறி பலபல அவையே நன்றற நின்றன சென்றன சிலவே அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள் அலைதரு கின்றனர் அலைவற மகனே புண்ணியம் உறுதிரு அருள்நெறி இதுவே பொதுநெறி எனஅறி வுறமுய லுதிநீ தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய் தனிநட ராசஎன் சற்குரு மணியே