நண்புடையாய் என்னுடைய நாயகனே எனது நல்உறவே சிற்சபையில் நடம்புரியும் தலைவா எண்புடையா மறைமுடிக்கும் எட்டாநின் புகழை யாதறிவேன் பாடுகஎன் றெனக்கேவல் இட்டாய் பண்புடைநின் மெய்யன்பர் பாடியபே ரன்பில் பழுத்தபழம் பாட்டில்ஒரு பாட்டும்அறி யேனே தண்புடைநன் மொழித்திரளும்() சுவைப்பொருளும் அவைக்கே தக்கஇயல் இலக்கியமும் தந்தருள்வாய் எனக்கே () மொழித்திறனும் - முதற்பதிப்பு, பொ சு, ச மு க