நதிகலந்த சடைஅசையத் திருமேனி விளங்க நல்லதிருக் கூத்தாட வல்லதிரு அடிகள் கதிகலந்து கொளச்சிறியேன் கருத்திடையே கலந்து கள்ளம்அற உள்ளபடி காட்டிடக்கண் டின்னும் பதிகலந்து கொளும்மட்டும் பிறர்அறியா திருக்கப் பரிந்துள்ளே இருந்தஎன்னை வெளியில் இழுத் திட்டு மதிகலந்து கலங்கவைத்த விதியைநினைந் தையோ மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே